
M.H.Wahab (Islahi), BA(UoP). PGD in Psychology (UoP), PGD in Child Protection & Rights (UoC), Diploma in Psychological Counselling (NISD), MSc Clinical & Health Psychology (R-UWL), Child Protection Officer of NCPA.
இரத்தச் சோகை என்பது உலகளாவிய ரீதியல் வியாபித்துக் காணப்படும் ஒரு சுகாரப் பிச்சினையாகும். குருதியில், செங்குருதியின் அளவு அல்லது ஹீமோளாபின் செறிவு குறைவாக இருக்கும் நிலையைக் குறிக்கின்றது (WHO, 2023). ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம், இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமாகும். உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று வழங்குவதற்கான ஒரு வாகனமாக இது தொழிற்படுகிறது. இரத்த சோகையில் பல்வேறு வகைகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை முக்கியமாக பெண்களையும் (குறிப்பாக கற்பிணிப் பெண்கள்) சிறுவர்களையும் அதிகமாகப் பாதிக்கும் பொதுவான வகை ஆகும். இரத்தத்தின் அதிக தேவை காரணமாக கர்ப்ப காலத்தில் இந்த நிலை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
இக்கற்றுரையின் நோக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தினூடாக (lifestyle change) இந்நோய் நிலை ஏற்படுவதிலிருந்து தவிரந்து கொள்வதற்கும், நோய் நிலை ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிகாட்டுவதாகும்.
இரத்தச் சோகையின் வியாபகம் (prevalence of anemia)
உலகளாவிய ரீதியில் 24.3% மானவர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போதிலும் வயது, பாலினம் மற்றும் அமைவிடம் என்பவற்றுக்கேற்ப அதன் பரவல் (pசநஎயடநnஉந) வித்தியாசப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் 6 முதல் 59 மாதங்கள் வரையான 40% மான சிறுவர்களும் 37% மான கற்பிணித் தாய்மார்களும் 15 வயது முதல் 49 வயது வரையான 30% மான கற்பிணியல்லாத பெண்களும் இரத்தச் சோகை நோய் நலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (2023) குறிப்பிடுகிறது.
ஆண்களைவிட பெண்கள் (குழந்தையைப் பிரசவிக்கவுள்ள பெண்கள், மாதவிடாயுள்ள பெண்கள், குழற்தையைப் பெற்று ஒரு வருடத்துக்குட்பட்ட தாய்மார்) இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமைவிடத்தைப் பொறுத்தவரை ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
குடும்ப சுகாதார பணியக 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி இலங்கiயில் 29.1% மான கற்பிணித் தாய்மார்கள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அனுராத மாவட்டத்தில் அமரசிங்க மற்றும் அவருடைய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மூன்று மாத கற்பிணித் தாய்மார்களுக்கு மத்தியில் 14.4% இரத்தச் சோகை இனங்காணப்பட்டுள்ளது. அதே ஆண்டின் உலக வங்கயின் அறிக்கையின் படி இலங்கையில் 34.6% மான குழந்தை பெறும் வயதிலுள்ள (வயது 19-45, கற்பிணி அல்லாத) பெண்;கள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தச்சோகை ஏற்படுவதற்கான காரணிகள்
இரத்த சோகை பல காரணிகளால் ஏற்படலாம். அவற்றுள் ஊட்டச்சத்து குறைபாடுகள், போதிய உணவை உள்ளெடுக்காமை (அல்லது ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு அகத்துறுஞ்சாமை), நோய்த்தொற்றுகள், அழற்சி, நாட்பட்ட நோய்கள், பெண்நோயியல் மற்றும் மகப்பேறியல் நிலைகள் மற்றும் பரம்பரை இரத்த சிவப்பணுக் கோளாறுகள் முக்கியம் பெறுகின்றன.
உணவுவேளiயில் போதுமானளவு இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுக்காமையினால் ஏற்படக் கூடிய இரும்புச்சத்து குறைபாடானது, இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மிகப் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது. வைட்டமின் A, ஃபோலேட், வைட்டமின் B12 மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகியவற்றின் குறைபாடுகளும் இரத்தச் சோகையை ஏற்படுத்தும். காரணம், இவை ஹீமோகுளோபின் மற்றும் அல்லது எரித்ரோசைட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர, (ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளால் ஏற்படும் இரத்த இழப்பு, பிரசவத்துடன் தொடர்புடைய இரத்தக்கசிவு அல்லது மாதவிடாய் இழப்பு) போன்றவற்றினால் ஏற்படும் ஊட்டச் சத்து இழப்பு, பலவீனமான அகத்துறிஞ்சல் உறிஞ்சுதல், பிறக்கும் போது குறைந்த இரும்புச் சேமிப்புகள் மற்றும் இரும்பு உயிர் கிடைக்கும் ( iron bioavailability) தன்மையை பாதிக்கும் ஊட்டச்சத்து இடைவினைகள் ஆகியவையும் இரத்தச் சோகையை ஏற்படுத்தும் காரணிளுள் உள்ளடங்கும்.
இரத்தச் சோகையை ஏற்படுத்தும் மற்றுமொரு முக்கிய காரணியாக (மலேரியா, காசநோய், எச்.ஐ.வி மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் போன்ற) தொற்று நொய்கள் காணப்படலாம். இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஊட்டச்சத்து அகத்துறுஞ்சல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம் (உதாரணமாக, மலேரியா, அஸ்காரியாசிஸ்) அல்லது ஊட்டச்சத்து இழப்பை ஏற்படுத்தலாம் (Ex: ஸ்கிஸ்டோசோமியாசிஸ், கொக்கிப்புழு தொற்று).
தொடர்ச்சியாகக் காணப்படும் கடுமையான மாதவிடாய் காரணமாக ஏற்படும் இரத்த இழப்புகள், கர்ப்ப காலத்தில் தாயின் இரத்த அளவு விரிவாக்கம் மற்றும் பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படும் இரத்த இழப்புகள், குறிப்பாக பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு போன்றன பொதுவாக இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
மேலும், பரம்பரை இரத்த சிவப்பணு கோளாறுகள் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் பொதுவான காரணிகளாக அமைகின்றன. ஹீமோகுளோபின் தொகுப்பின் அசாதாரணங்களால் ஏற்படும் α- மற்றும் β-தலசீமியா, ஹீமோகுளோபின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அரிவாள் கலக் கோளாறுகள், ஹீமோகுளோபின் மரபணு மாறுபாடுகளால் ஏற்படும் பிற ஹீமோகுளோபினோபதிகள், சிவப்பு அணு நொதிகளின் அசாதாரணங்கள் அல்லது சிவப்பு இரத்த அணுக்களின் அசாதாரணங்கள் போன்ற நிலைமைகள் இதில் அடங்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தீவிர இரத்தச்சோகையினால் தாய் மற்றும் சேய்க்கு ஏற்படக்கூடிய பாதமான விளைவுகள்
இரத்தச் சோகை இருக்கின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
இரத்த சோகை பொதுவாக கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அல்லது ஹீமாடோக்ரிட் அளவை அளவிடும் வழக்கமான இரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது:
இவற்றின் அளவை மதிப்பீடு செய்வதற்கு பின்வரும் இரத்தப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம் : முழுமையான இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனை, சீரம் ஃபெரிடின், இரும்பு, மொத்த இரும்பு-பிணைப்பு திறன் மற்றும் டிரான்ஸ்ஃபெரின் பரிசோதனைகள். இவை தவிர இன்னும் பல பரிசோதனை முறைகள் காணப்படுகின்றன. அவை தேவை நிமிரத்தம் மகப்பேற்று வைத்திய நிபுணரினால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக அவர்களின் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளும், மீண்டும் 28 வாரங்களிலும் இரத்த சோகைக்கு பரிசோதிக்கப்படுகிறார்கள். யாரும் இரத்த சோகைக்கு அதிக ஆபத்தில் இருந்தால், அடிக்கடி இரத்தப் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்.
இரத்தச் சோகையின் அறிகுறிகள் எவ்வாறு காணப்படும்?
இரத்த சோகை என்பது ஒருவரின் உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாதபோது அல்லது அவை சரியாக செயல்படாதபோது ஏற்படும் இரத்தக் கோளாறு ஆகும். இக்கோளாறின் அறிகுறிகளுள் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன :
இவை தவிர இன்னும் சில அறிகுறிகளும் காணப்படுகின்றன : புண் அல்லது வீக்கமடைந்த நாக்கு, வாய்ப் புண்கள், பெண்களில் அசாதாரணமான அல்லது அதிகரித்த மாதவிடாய் இரத்தப்போக்கு. இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் வைத்திய நிபுணர் ஒருவரின் உதவி மூலம் நோயை நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானது.
கற்பகாலத்தில் இரத்தச் சோகை ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கௌ;வது எவ்வாறு?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரண்டு அருட்கொடைகளில் மனிதர்கள் பலர் கவனயீனமாக உள்ளனர்: ஆரோக்கியம் மற்றும் ஓய்வு’ (புகாரி). இந்த நபி மொழி மனிதர்கள் தமது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, இங்கு முன்வைத்துக் கலந்துரையாடப்பட்ட இரத்தச் சோகை எனும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையை முற்தடுப்பு செய்வதற்கும், நோய் ஏற்பட்டதன் பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கும் எங்களுடைய நடத்தையைச் சரி செய்துகொள்வது மிக அவசியமாகும். நல்ல உணவுப் பழக்கம், வைத்தியரின் ஆலோசனைகளைச் சரியாகப் பின்பற்றுதல், பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை, மருத்துகளை, மருத்துவப் பரிசோதனைகளை, சுகாதார, மருத்துவ உளவியளாளர்களின் வழிகாட்டல்களை, மற்றும் உளவளத்துணையாளர்களின் பரிந்துரைகளை சரியான முறையில் சரியான நேரத்துக்கு, சரியான முறையில் முன்னெடுத்தல் போன்றன கருத்திற்கொள்ளப்படவேண்டிய நடத்தைகளாக எதிர்பார்;க்கப்படுகின்றன.
எமது மனப்பாங்கு மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் வராத வரை எவ்வகையான ஆரோக்கியப் பிரச்சினைகளையும் வெற்றி கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.