ஸஞ்ஸீதா முஜீப் ரஹ்மான் (இஸ்லாஹி), புல்மோட்டை, திருகோணமலை
ஈமானின் ஈர்ப்பில் கவர்ந்திழுக்கப்பட்டு
அதனுள்ளே எத்துனை இறைசுகங்களையும்
அணுவணுவாய் அனுபவித்து இன்பித்து இறையோனின் அருளால் அள்ளிவார்க்கப்பட்டு அவனுக்காய் அனைத்தையும் ஏற்று ஆழ்மனதில் ஆழப்பதித்திடும் போது சுகங்கள் ஒன்றும் சுமையாகாது
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
ஒவ்வொன்றாய் கோர்த்து வல்லோனிடம் ஒப்படைத்து மனபாரம்
முழுவதையும் இறக்கி வைத்ததும் இன்பமழை கொட்டிடும் அதுவே போதும் எனத்தோன்றும் அந்த நொடியில்
நீடிக்காத கவலையையும் சில நேரம் நீடிக்கும் சந்தோஷங்களையும் அடக்கிவைக்க முடியாமல் கொட்டிவிட ஆவலாய் கரம் ஏந்தி கொட்டிவிட்டால்
மனம் திறந்துவிடப்பட்ட வெட்ட வெளிபோல் தூய்மையை உணர்த்தும்
தினம் கேட்கும் பிராத்தனைகளால்
கண்களால் சொட்டப்படும் கண்ணீரால்
கசடுகளெல்லாம் கழன்றுவிடுவதும்
கற்பனைக்கெட்டாத்தூரம் இறைவனுக்கும் எனக்கும்
எதுவும் வீணாகாததாய் வீழாததாய் வியர்வைக்கண்ணீரை சுரந்து சுருதியையும் தொலைத்துவிட்டு தொலைதூரமாய் உணர்ந்த உன் பாசத்தை பக்கத்தில் கொண்டு வந்ததாய் மனதில் வார்த்தெடுக்கும் போது விழிநீரும்தான் வலிகளும் தான் வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்
ஏந்திய என் கரங்களுக்கு உன் அருள் விருந்தினை விதைத்திடு சொட்டிய என் கண்ணீர் துளிகளுக்கு கைக்குட்டையாய் உன் அன்பைக்கொண்டு துயர்துடைத்திடு!
3 Comments
Neque porro quisquam est, qui is dolor emr ipsum quia dolor sit amet the consec tetur is adipisci velit, sed Neque porro.