
தாஹிர் நூருல் இஸ்ரா, உதவி விரிவுரையாளர். உட்படுத்தல் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம்
அறிமுகம்
பல்வகைமையுடன் கூடிய இடம் மிகவும் விருப்புக்குரியது. அது விருவிருப்பானதாகவும் மாறிவிடுகின்றது. இதனாலேயே அவை, ஒன்றில் இருந்து மற்றொன்று குறிப்பிடத்தக்க வேறுபாட்டினை கொண்டிருக்கின்றது. அவதானக்குறைவும், அதீத செயற்பாடுமுடைய மாணவர்கள் வகுப்பறையில் இருப்பது மற்றொரு வகுப்பறை பல்வகைமையை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இப்பிள்ளைகள் கற்றல் தேர்ச்சிகளை அடைந்துகொள்ள அவர்களுக்கு நடத்தை சார் மேம்படுத்தல்கள் மற்றும் இதர உதவிகளும் அவசியம் பெருகின்றன. உட்படுத்தல் கல்வி (பொதுக்கல்வி) வகுப்பறையில் ஆசிரியர்கள் அவர்களின் கல்விசார் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் போது, ஓர் உளவளத்துணையாளர் குறிப்பாக பிள்ளையிடம் காணப்படும் அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் காரணமாக சமூகத்துடன் ஒத்து வாழ்வதற்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு உதவுவர் ;.
அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் (Attention Deficit Hyperactivity Disorder–ADHD) என்பது சிறுவர்களிடம் காணப்படும் பொதுவான நடத்தைசார் ஒழுங்கீனமாகும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில், ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் பிள்ளைகள் பாதிக்கப்பட்படுகின்றனர். இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் காயம் மற்றும் விபத்து தொடர்பாக அனுமதிக்கப்படும், அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் மற்றும் வெளிநோயாளர் பிரிவிற்கு வரும் நோயாளர்களை அடிப்படையயாக கொண்டு பெறப்பட்ட தகவலுக்கு இனங்க 5.1% வீதம் சிறுவர்களிடம் ஆதீத செயற்பாடும் அவதானக்குறைவும் நோய்நிலைமைக் கண்டறியப்பட்டுள்ளது . அதே போன்று எல்லா வகுப்பறையிலும் (சாதாரண) அதீத செயற்பாடும் அவதானக்குறைப்பாடுடைய ஒரு மாணவனைக் காணமுடியும் என பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்பிள்ளைகள் கல்வி, நடத்தை மற்றும் சமூக தொடர்பு போன்ற விடயங்களில் பிரச்சினையை எதிர்கொள்வதுடன், அவற்றில் இருந்து வெளியேவர அல்லது விடுபட அவர்களுக்கு தொழில்வான்மையாளர்களின் உதவி அவசியமாகின்றது.
அவதானக் குறைப்பாடும் அதீத செயற்பாடுமுடைய பிள்ளைகளில் அதிகமானவர்களின் நடத்தைகள் ஆசிரியர்களால் முதல் தடவையாக வகுப்பறையில் அவதானிக்கப்படுவதன் , அவர்களே குறித்த பிள்ளைகளிடம் ஆதீத செயற்பாடும் அவதானக்குறைப்பாடும் இருப்பதனை இனங்கண்டு அவர்களை வைத்தியர்களிடம் பரிந்துரை செய்கின்றனர் . இளம் பராயத்தில் இப்பிள்ளைகளை இனங்காண்பதன் மூலம் நீண்டகால பாதிப்புகளை குறைத்துக் கொண்டு அவர்களின் நுண்ணறிவு இயலுமையை விருத்தி செய்துக்கொள்ள முடியும் . அவதானக் குறைவும் அதீத செயற்பாடு உடைய பிள்ளைகள் தொடர்பாக ஆசிரியர்களின் மனப்பாங்கானது வகுப்பறை செயற்பாட்டினை பாதிப்பதுடன் அது மாணவர்களின் அடைவிலும் தாக்கம் செலுத்துகின்றன என கண்டறியப்பட்டுள்ளது . மேலும் ஆசிரியரின் மனப்பாங்கானது குறித்த பிள்ளை தொடர்பாக ஏனைய மாணவர்களின் புலக்காட்சியிலும் (Perception) தாக்கம் செலுத்துவதாக அட்கின்சன், ரொபின்சன் மற்றும் சூட் என்போர் (1997) மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இலங்கையில் ஆரம்ப பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பார்வையில் அவதானக் குறைவும் அதீத செயற்பாட்டு ஒழுங்கீனமும் எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதீத செயற்பாடும் அவதானக் குறைப்பாடுடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பது தொடர்பான அறிவு மற்றும் பயிற்சி என்பன, ஆய்வில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களிடமும் திருப்திகரமான அளவில் இல்லை என்பதனை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 80 (%) வீதம் ஆசரியர்கள் மோசமான பிள்ளை வளர்பின் விளைவாகவே இந்நோய் ஏற்படுகின்றது எனவும் பிள்ளைகள் வேண்டுமென்று பிறழ்வுநடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர் எனவும் (56.5 %) நம்புகின்றனர். இலங்கையில் ஆரம்பகல்வி ஆசிரியர்களுக்கு, அவதானக் குறைவும் அதீத செயற்பாடுடைய பிள்ளைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கவும், பயிற்சி அளிக்கவும், மாணவர்களை கற்பிக்க மற்றும் அவர்களுக்கு உதவி செய்யவும் நன்கு வடிவமைக்கப்பட்ட கல்வி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்படவில்லை . சாதாரண வகுப்பறைகளில் கற்கும் இவ்வாறான பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கு தேவையான, போதுமான வளங்கள், உதவிகள் மற்றும் வழிகாட்டல்கள் உரிய நிறுவனங்களிடம் கிடைக்கப்பெறவில்லை எனவும் இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. எனவே ஆசிரியர்களிடம் இப்பிள்ளைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என குறித்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
(கல்வி அமைச்சு (2013). சத்துரிகா (2015) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் இலங்கையில் உள்ள பாடசாலைகள் ஒன்றிலேனும் ‘பாடசாலை உளவியலாளர்’ (School Psychologist) இல்லை. அவ்வாறே பாடசாலைகளில்; தரமான ‘பாடசாலை உளவளத்துணை சேவை’ திருப்திகரமான அளவில் வழங்கப்படுவதும் இல்லை என கண்டறிந்துள்ளனர் . மேலும் அவ்வாய்வின் முடிவுகள் சிலதை இங்கு ஆழமாக நோக்குவது அவசியமாகின்றது. பாடசாலைகளில் வழங்கப்படும் தனியார் உளவளத்துணை சேவை தொடர்பாக 65(%) வீதம் சேவைநாடிகள் (பிள்ளைகள்) தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 52 (%) வீதம் சேவைநாடிகள் தமது பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள உளவளத்துணை சேவை மற்றும் சேவை வழங்கப்படும் இடம் தொடர்பாக திருப்தியற்றவர்களாக இருக்கின்றனர். என அம்முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் கல்வி துறையினால், இயலாமையுடைய தனிநபர்களுக்கான கல்வி சட்டம் (Individuals with Disabilities Education Act- IDEA) கல்வி தேவையுடையவர்களை வகைப்படுத்தியுள்ளது. அவர்களின் வகைப்படுத்தலுக்கு ஏற்ப ஏனைய சுகாதார பிரச்சினைகள் (Other Health Problem) எனும் வகைப்படுத்தலின் கீழ் அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகளை உள்ளடக்கியுள்ளதுடன் அவர்களுக்கு விசேட கல்வியுடன் தொடர்பான சேவைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுருத்துகின்றது. கல்வி அமைச்சின் விசேட கல்வி மற்றும் முறைசாரா கல்வி அலகின் தகவல்களுக்கு ஏற்ப (2022.06.30) இலங்கை பாடசாலைகளில் காணப்படும் விசேட கல்வி அலகுகளிலும், விசேட பாடசாலைகளிலும் 9655 மாணவர்கள் கற்கின்றனர். விசேட கல்வி ஆசிரியர்கள் 1725 பேர் கற்பிக்கின்றனர். தேசிய பாடசாலைகளில் 178 விசேட கல்வி அலகுகளும், மாகாண பாடசாலைகளில் 690 விசேட கல்வி அலகுகளும் காணப்படுகின்றன. அவ்வாறே 27 விசேட பாடசாலைகளும் காணப்படுகின்றன. இதற்கமைவாக அவதானக்குறைவும் அதீத செயற்பாடுமுடைய பிள்ளைகள் விசேட கல்வி அலகுகளில், விசேட பாடசாலைகளில் அல்லது உட்படுத்தல் வகுப்பறைகளில் கற்க முடியும். புள்ளிவிபரங்கள் மற்றும் இலக்கிய மீளாய்வுகளை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது இலங்கையில், தற்போதய நிலையில் அவதானக்குறைவும் அதீத செயற்பாடும் உள்ள பிள்ளைகள் தொடர்பாக அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து செயற்பட வேண்டும் என்பது புலப்படுகின்றது. அவர்களுக்கு போதுமான அளவு உதவி கிடைக்கப் பெறவில்லையென்பது தின்னமாகிறது. அதன் அடிப்படையில் இக்கட்டுரை காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு முன்வைக்கப்படுகின்றது.
1. அவதானக் குறைவு மற்றும் அதீத செயற்பாட்டின் வகைகள்
அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் என்றால் என்ன என்பது தொடர்பாக நோக்குவது அவசியம். இது சிறுவர்களிடம் பொதுவாக ஏற்படக்கூடிய நரம்பு சார் ஒழுங்கீனமாகும். பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர், விகிதாசாரா அடிப்படையில் 9:4 விகிதம் ஆகும் . பிள்ளைகள் வெளிப்படுத்தும் குணங்குறிகளுக்கு ஏற்ப, இவ் ஒழுங்கீனம் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றது.
ADHD)
(Predominantly Hyperactive – Impulsive ADHD)
3. தெள்ளத் தெளிவான கவனக்குறைவும், அதீத செயற்பாடுடன் கூடிய மனமுடுக்கு நிலைமை ஆகிய இரண்டும் இணைந்து காணப்படுதல் (Combined Presentation)
கீழே பகுதி 1 அல்லது பகுதி 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள குணங்குறிகளில் ஆறு (6) அல்லது அதற்கு மேற்பட்ட குணங்குறிகள் 06 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமாக காணப்படுமாயின் அது பொருத்தமற்ற மற்றும் இனக்கமற்ற விருத்தி நிலையாக கருதப்படும் ;.
1.1 அவதானக் குறைவு (Inattentive)
பாடசாலை செயற்பாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் எப்போதும் கவனச் சிதறல் மற்றும் கவனயீனப்பிழைகளை விடுதல்
எப்போதும், ஒரு செயற்பாட்டில் அல்லது விளையாட்டில் தொடர்ச்சியான கவனத்தை செலுத்த முடியாமை
தொடர்ச்சியாக உரையாடும் போது அதனை செவிமடுக்க முடியாமை
எப்போதும் அறிவுருத்தல்களை பின்பற்றவும் பாடசாலை வேலைகள், கடமைகளை நிறைவேற்றவும் தவறுதல்.
எப்போதும் வேலைகளையும், செயற்பாடுகளையும் ஒழுங்குப்படுத்துவதில் சிரமப்படுதல்.
மனதினை ஒரு நிலைப்படுத்தி தொடர்ச்சியாக ஈடுபடும் வேலைகளை அடிக்கடி தவிர்த்தல் அல்லது அவற்றில் விருப்பின்மை.
அன்றாடம் செயற்பாடுகளில் பயன்படுத்த தேவையான பொருட்களை அடிக்கடி தொலைத்தல் (விளையாட்டுப் பொருட்கள், பாடசாலைக் கணிப்பீடு, பென்சில், புத்தகம் மற்றும் கருவிகள்)
எப்போதும் வெளிப்புற தூண்டிகளால் கவனம் சிதறப்படுதல்
நாளாந்த செயற்பாடுகளை கூட மறந்துவிடுதல்
1.2 அதீத செயற்பாடு (Hyperactivity)
எப்போதும் பிட்ஜெட் (fidgets) போன்ற விளையாட்டு பொருட்களை கையில் வைத்திருத்தல், கைகளையும், கால்களையும் நெலித்தல் (squirms).
பெரும்பாலும் வகுப்பறையிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் தமது இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிடுதல்.
சம்பந்தம் இல்லாத பொருத்தமற்;ற தருணத்தில் அதிகமாக ஓடுதல் அல்லது ஏறுதல்
எப்போதும் அமைதியாக விளையாடுதல் மற்றும் பொழுது போக்குகளில் ஈடுபடமுடியாமை.
அடிக்கடி எழுந்து நடத்தல் அல்லது ஓடுதல், அவ்வாறு செயல்படுவதற்கு எப்போதும் ஒரு இயங்குவிசை ஒன்று இயங்கிக்கொண்டிருத்தல்
எப்போதும் அதிகமாக பேசுதல்
மேற்குறிப்பிட்ட குணங்குறிகளில் 06 அல்லது அவற்றிற்கு அதிகமாக ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக காணப்படுமாயின், அது பொருத்தமற்ற மற்றும் இனக்கமற்ற விருத்தி நிலையாக கருதப்படும்.
1.3 மனமுடுக்கு (Impulsivity)
கேள்வி கேட்டு முடிவதற்குள் பதிலளிக்க முந்துதல்.
தனது தருணம் வரும்வரை காத்திருக்க முடியாமை
அடிக்கடி ஏனையவர்கள் மீது குறுக்கிடுதல் அல்லது ஊடுருவுதல் ( விளையாட்டு மற்றும் உரையாடல்)
என்பன அவதானக்குறைவும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகள் வெளிப்படுத்;தக் கூடிய நடத்தைக் கோலங்கள் மற்றும் குணவியல்புகள் ஆகும்.
2. அவதானக் குறைவும் அதீத செயற்பாடுமுடைய பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
அவதானக் குறைவும் அதீத செயற்பாடுமுடைய பிள்ளைகள் தமது இத்தன்மை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது அவர்களை மாத்திரம் அன்றி அவர்கள் சார்ந்த சூழலையும் பாதிக்கின்றது. குடும்பம், பாடசாலை மற்றும் சமூகம் என அனைத்துச் சவால்களுக்கும் முகம் கொடுக்கின்றன. அவ்வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பின்வருமாறு நோக்கலாம்.
2.1 கல்வி அடைவுகளில் பிரச்சினை (Academic Performance Problems)
அதிகமான பிள்ளைகள் (90%) சில பாடங்களில் குறைவான அடைவுமட்டத்தை பிரதிபலித்துள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சோதனைகளின் போது 5-15 வீதமான புள்ளிகள் இவர்களிடம் காணப்படும் கவனச்சிதறலினால் ஏற்படுகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் எழுத்துபிழை, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித அடைவுகள் என்பவற்றில் இடர்படுகின்றனர். எனவே அவர்கள் எப்போதும் விரல்கள் அல்லது பொருட்களின் துணையுடன் கணித செயற்பாடுகளை செய்ய முயற்சி செய்கின்றனர். எனினும் முறைசார் கல்வி தேவைகளையும் விட இசை, வரைதல், திருத்த வேலைகள் மற்றும் பொருத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட விரும்புவர். நேரம் பார்த்தல் நேரத்திற்கு வேலைகளை முடித்தல் என்பவற்றில் ஈடுபடுகின்றனர். இவர்கள் கனி~;ட இடைநிலை வகுப்பிலே பாடசாலையை விட்டு இடைவிலகி செல்கின்றனர்.
2.2 கற்றல் இயலாமை (Learning Disabilities)
அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகளிடம் 40மூ வீதம் தொடக்;கம் 50% வீதம் வரையில் கற்றல் இயலாமை காணப்படுகின்றது. புரிந்துக்கொள்ளுதல் அல்லது மொழியை பயன்படுத்துதல், பேசுதல் அல்லது எழுதுதல், செவிமடுத்தல் என்பவற்றில் இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கினறனர். கற்றல் இயலாமையுடைய எல்லா பிள்ளைகளும் அவதானக் குறைப்பாடும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகள் அல்ல. ஆனால் இப்பிள்ளைகளிடம் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் கற்றல் இயலாமை காணப்படலாம்.
2.3 பேச்சு மற்றும் மொழி ஒழுங்கீனங்கள் (Speech & Language Disorders)
இவர்களிடமும் பேச்சு மற்றும் மொழி ஒழுங்கீனப் பிரச்சினை காணப்படலாம். ஏனெனில் பேசுவதில் ஏற்படும் தாமதம், மொழியை பயன்படுத்துதல், பேச்சு வெளிப்படும் பகுதிகளில் காணப்படும் பிரச்சினை, வெளிப்படுத்துகையில் காணப்படும் இயலாமை, மொழி வெளிப்பாடு தாமதம் காரணமாக ஏற்படும் வரையறுக்கப்பட்ட சொல்வளம், சொற்களை கண்டறிவதில் காணப்படும் இடர்பாடு மற்றும் மோசமான இலக்கண பிரயோகம் போன்ற பேச்சு மற்றும் மொழிசார் இடர்பாடுகளுக்கு உட்படுகின்றனர்.
2.4 டொரட் சின்றம் (Tourette Syndrome)
இது நரம்பியல் சார்ந்த பல்வகை-டிக் ஒழுங்கீனமாகும் (Multiple-Tic Disorder). இது அவதானக்குறைவும் அதீத செயற்பாடும் காரணமாக செயல் சார்ந்தும் ஒலி சார்ந்தும் காணப்பட முடியும். பொதுவாக இது தன்னிட்சையான செயற்பாடு டிக் (Involuntary Motor-Tics) காணப்படவும் முடியும். உதாரணமாக கண் சிமிட்டல், முகத்தை சுழித்தல், கையை அல்லது கால்களை அசைத்தல் அல்லது ஆட்டுதல், துள்ளுதல் சருகுதல் (skipping) என்பவற்றைக் குறிப்பிடலாம். அவ்வாறே தன்னிட்சையான ஒலி- டிக் (Involuntary Vocal-Tics) காணப்படவும் முடியும். தொண்டையால் இருமுதல், குறைத்தல், முணுமுணுத்தல், உச்சரித்தல் மற்றும் ஆபாசங்கள் என்பவற்றை குறிப்பிட முடியும்.
2.5 மனவெழுச்சி வெளிப்பாடு (Emotional Reactivity)
அவதானக் குறைவும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகளிடம் காணப்படும் தாழ்வுச்சிக்கலும், குறைவான தாங்குதிறனும் காரணமாக இலகுவில் தமது மனவெழுச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் மிக விரைவாக கோபமடைகின்றனர். சந்தர்பத்திற்கு ஏற்றவகையில் தம்மை மேம்படுத்துவதனை தவிர்த்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி விடுகின்றனர். இப் பிள்ளைகளில் 50 (%) வீதத்திற்கும் மேற்பட்டவர்கள், முதிர்ச்சியடையாத மனவெழுச்சிக்குரிய சில குணங்குறிகளை வெளிப்படுத்துகின்றனர்.
2.6 நடத்தைசார் பிரச்சினைகள் (Conduct Problems)
இவர்கள் எதிர்ப்பை ஏற்படுத்தும் நடத்தைகளை வெளிப்படுத்துவர். முன்கோபம், கோபம், அடம்பிடித்தல், தகாத வார்தைகளை பேசுதல் அல்லது வாய்மொழி ரீதியாக காயப்படுத்தல், பிள்ளையின் சுபாவத்தை மீறிய நடத்தை வெளிப்பாடு என்பன இவர்களிடம் காணப்படும் அவதானக் குறைவு மற்றும் அதீத செயற்பாடு காரணமாக ஏற்படுவதாகும். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாகவோ அல்லது மொழி வெளிப்பாடு ரீதியாகவோ முரட்டுத்தனமாகச் செயற்படலாம். அவர்கள் சில நேரம் பொய் பேசவோ அல்லது களவெடுக்கவோ முடியும். அத்தோடு சில பிள்ளைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் தவறான நடத்தைகளையும் வெளிப்படுத்தலாம். இந்நடத்தையுடன் தொடர்புடைய சிக்கல்கள் காரணமாக அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே மிக இளமைகாலத்திலே இப்பிள்ளைகளை கட்டமைத்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வதற்கு பங்களிப்பு செய்தல் வேண்டும்.
2.7 பிரச்சினை தீர்த்தல் மற்றும் ஒழுங்கமைப்பு திறனில் பிரச்சினை
அவதானக்குறைப்பாடும் அதீத செயற்பாடும் உடைய பிள்ளைகளிடம் பொதுவாகவே, சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மூலோபாயங்கள் மற்றும் ஒழுங்கமைப்புத் திறன் என்பவற்றில் இடர்பாடுகள் காணப்படுகின்றன. அதே வேளை அவர்கள் ஆற்றவேண்டிய கருமங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு மேலிடத்தினால் (ஆசிரியர்களினால்) வழங்கப்பட்ட அறிவுருத்தல்களை ஞாபகம் வைத்திருத்தல் மிகவும் சிரமமாகும். சிக்கலான பெரிய கருமங்களை ஆற்றும் போது அவர்களின் மூளையில் காணப்படும் அறிவுருத்தல்களை வழங்கும் பகுதி தானாகவே மூடிவிடுகின்றது. என்றாலும் அவர்களின் மனமுடுக்கு நிலை இயங்கி கொண்டிருப்பதனால் அவர்கள் வினைதிறனற்ற உபாயங்களை பிரச்சினை தீர்த்தலுக்காக பயன்படுத்துவதுடன், மிகவும் மந்தமான ஒழுங்குப்படுத்தல்களையும் செய்கின்றனர்.
இவ்வாறான தன்மைகளை உடைய பிள்ளைகள் வகுப்பறையில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்களின் குணவியல்புகளை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் நடத்தை கோலங்களை விளங்கிக் கொள்வதற்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் தவறிவிடுகின்றர். எனவே இவர்களின் கல்வி உரிமையை உறிதிப்படுத்த, கல்வி மாத்திரம் வழங்குதல் போதுமானது அல்ல. முதலில் இப்பிள்ளைகள் தொடர்பாக பாடசாலை சமூகம் விழிப்படைய வேண்டும். அத்தோடு இப்பிள்ளைகளின் பெற்றோர்களும், இவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் உள்ள ஏனைய பிள்ளைகளின் பெற்றோர்களும் ஒருங்கே விழிப்படைய வேண்டும். ஆசிரியர்களை பொருத்தவரை இவ்வாறான பிள்ளைகளை வகுப்பறையில் எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பாகவும் இவர்களுக்கான விசேட கற்பித்தல் முறைகள் தொடர்பாகவும் இற்றைப்படுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகும். அவ்வாறே உளவளத்துணையாளர்கள் தம்முடைய தொழில்சார் பங்களிப்பினை இப்பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய தார்மிக பொறுப்பு காணப்படுகின்றது. உளவளத்துணையாளர் என்றவகையில் பிள்ளைகளின் மனவெழுச்சி, நடத்தை கோலங்கள் மற்றும் சமூக தொடர்பாடல் திறன்கள் தொடர்பில் தமது அவதானத்தை செலுத்தி பங்களிப்பு செய்யும் போது அனைவருக்கும் கல்வி (Education for All) எனும் இலக்கு எட்டிவிடும் தூரத்திலே உள்ளது.
3. ரீட் மாதிரி (The TREAT Model)
உளவளத்துணையாளர் இப் பிள்ளைகளுடன் செயற்படும் போது தமது தொழில்சார் கருவிகளையும் நுட்பங்களையும் பயன்படுத்துதல் விணைதிறனானதாகும். அவ்வாறு அவர்கள் கையாளும் நுட்ப முறைகளில் ‘ரீட் மாதிரி’ (வுhந வுசுநுயுவு ஆழனநட) முக்கியம் பெறுகின்றது. வுசுநுயுவு எனும் ஆங்கில சொல்லின் விரிவாக்கம் பின்வருமாறு அமைகின்றது.
T. Theories and Concept (கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும்)
R. Relationships (உறவுமுறை)
E. Environments (சூழல்)
A. Adjuncts Services (துணைச் சேவைகள்)
T. Treatable Goals & Objectives (தலையீட்டு நோக்கங்கள் மற்றம் இலக்குகள்)
அவ்வடிப்படையில் இம் மாதிரியில் குறிப்பிடும் உப அம்சங்கள் தொடர்பாக சுருக்கமாக நோக்குவது மேலும் தெளிவினை வழங்கும்.
3.1 கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும் (Theories and Concept)
உளவளத்துணை சேவையினை வழங்கும் போது அடிப்படை ஆதாரமாக திகழ்வது கோட்பாடுகளும் தத்துவங்களுமே. அவற்றினை ஆதாரமாக கொண்டே சேவைநாடியையும் அவரது பிரச்சினையையும் விளங்கிக்கொள்கின்றனர். அவற்றில் சில கோட்பாடுகள் தலையீட்டு நுட்பங்களையும் குறிப்பிடுகின்றன. அது மாத்திரமன்றி பிள்ளை அல்லது சேவைநாடி சமாளிக்கும் பாணியினை கண்டறிந்து அதற்கு ஏற்ப தலையீட்டு திட்டமிடலை மேற்கொள்ளவும் கோட்பாட்டு அறிவு அவசியம்.
3.2 உறவுமுறை (Relationships)
உளவளத்துணை செயன்முறையானது, உளவளத்துணையாளருக்கும் சேவை நாடிக்கும் இடையிலான தொடர்பிலே தங்கியுள்ளது. உளவளத்துணை செயன்முறையின் வெற்றி தோல்வி தங்கி இருப்பது நல்ல உறவுமுறையை பேணுவதிலாகும். அவ்வடிப்படையில் உளவளத்துணையாளருக்கும், பிள்ளைக்கும் இடையில் தொழில்வான்மையான உறவு முறை பேணப்பட வேண்டும் என உளவளத்துணை ஒழுக்க கோவை (ஊழனந ழக நுவாiஉ) சுட்டிக் காட்டுகின்றது.
3.3 சூழல் (Environments)
பிள்ளை உளசமூக தேவையை இனங்காண்பது, பல்நிபுணத்துவ குழுவின் உறுப்பினரான உளவளத்துணையாளரை சாரும். அதன் போது பிள்ளை வாழும் மற்றும் பிள்ளை சமூகத்துடன் இடைவினைசெய்யும் சூழல் தொடர்பான ஆழமான தேடலும் புரிந்துணர்வும் பாடசாலை உளவளத்துணையாளருக்கு அவசியமாகும். அதனை அடிப்படையாக கொண்டே, எப்போது உளவளத்துணை சேவை வழங்குவது, எங்கு வழங்குவது (பாடசாலையிலா அல்லது மாற்று இடங்களிலா), எந்த வடிவத்தில் வழங்குவது (தனியாள், குழு மற்றும் குடும்பம்). தனியாள் கல்வி திட்டமிடலுக்கு ஏற்றவகையில் குறுகிய கால இலக்குகளை அடைய எத்தனிக்கும் உத்தேச கால அளவு. எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை பாடசாலை உளவளத்துணையாளரையோ அல்லது ஏனைய தொழில் வான்மையானவர்களை சந்திக்க வேண்டும். போன்ற விடயங்களை தீர்மானிக்க முடியும்.
3.4 துணைச் சேவைகள் (Adjuncts Services)
பிள்ளைகளை பொருத்தவரை எல்லா சந்தர்ப்பங்களிலும் உளவியல் சார் உளவளத்துணை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிள்ளையின் தேவையை சரியாக இனங்கண்டு பிள்ளைக்கு துணை சேவைகளை வழங்கும் போது குறித்த தேவையினை நிவர்த்தி செய்ய முடியும். அவ்வகையில், மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைப்பது (ஆசிரியர்களே யுனுர்னு பிள்ளைகளை வகுப்பரையில் இனங்காண்கின்றனர்) சட்ட உதவிகளை நாடுவது. சமூக பாதுகாப்பு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள வழிப்படுத்தல் (தேசிய அங்கவீனர்கள் செயலகம் மற்றும் மாகாண சமூகசேவைகள் திணைக்களம் ஆகியவற்றினரால் இயலாமையுடையவர்களுக்கு வழங்கும் மாதாந்த மற்றும் விசேட கொடுப்பனவுகளை வழங்க வழிப்படுத்தல்) மூக்குக் கண்ணாடி, சக்கர நாட்காளி போன்றவற்றை பெறவழிப்படுத்தல். சமுதாயத்தில் காணப்படும் சிறிய அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் உதவியை தேவையின் போது பெற்றுக்கொள்ள வழிப்படுத்தல். உதவிசெய்யக்கூடிய நண்பர்களை கூட்டு சேர்த்து (Pநநச hநடிநச) கற்றல் தேவைகளுக்கு உதவுதல். மற்றும் பெற்றுக்கொள்ளும் வகையில் காணப்படும் வளங்கள் (யஎயடையடிடந சநளழரசஉநள) என்பனவும் காணப்படுவதுடன் அவை தேவைக்கேற்ப, தேவையான அளவில் பயன்படுத்தப்பட வேண்டும்.
3.5 தலையீட்டு நோக்கங்கள் மற்றம் இலக்குகள் (Treatable Goals & Objectives)
தலையீட்டு நோக்கங்களை தீர்மானிக்கும் போது பிள்ளையினுடைய தனியாள் நிகழ்சி திட்டங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளை மேலே குறிப்பிட்ட நான்கு பகுதிகளிலும் போதுமான தகவல்களை பெற்று இடைவினைகளை புரிந்த பின்னர், பிள்ளையின் தேவையினை அடிப்படையாக கொண்டு அத்தேவைகள் முன்னுரிமை படுத்தப்பட்டு நடத்தைகளுக்கான காரணங்களை அல்லது சந்தர்ப்பங்களை குறைத்தல். ஆளிடை தொடர்பை அதிகரித்தல் மற்றும் சந்தேகத்தை அல்லது அவநம்பிக்கை ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பாக கவனம் செலுத்தி தலையீட்டு இலக்குகளை தீர்மானித்தல் வேண்டும். ரீட் மாதிரியை அறிமுகம் செய்த அதன் ஆசிரியர் இம்மாதிரியினை களத்தில் பிரயோகித்து அதற்கு ஏற்ப தனியாள் கல்வி திட்டங்களை வகுக்கும் பல்நிபுனத்துவ குழுவில் அங்கத்தவராக செயற்படும் போது பிள்ளையில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
4. தீர்வை மையப்படுத்திய விளக்க குடும்ப சிகிச்சை (Solution- Focused Brief Family Therapy)
அவதானக் குறைவு அதீத செயற்பாடுடைய பிள்ளைகள் போன்று ஏனைய விசேட கல்வி தேவையுடைய பிள்ளைகளுடன் செயற்படும் ஓரு பாடசாலை உளவளத்துணையாளருக்கு தீர்வை மையப்படுத்திய விளக்க குடும்ப சிகிச்சை முறைமையை பின்பற்றுவது சிறந்தது. ஏனெனில் அவர்களின் விசேட தேவைகள் காரணமாக ஏதேனும் ஒருவகையில் மற்றும் ஒரு அளவில், அவர்கள் மற்றவர்களில் தங்கியிருக்கின்றனர். எனவே அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கற்றல் அடைவுகள் மற்றும் தேர்ச்சிகளை அடையவும் பெற்றோருடைய பங்களிப்பு மற்றும் குடும்பத்தின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. விசேட தேவையுடைய ஒரு பிள்ளையின் பலம் என்பது அவர்களின் குடும்பமாகும். எனவே தீர்வை மையப்படுத்திய விளக்க குடும்ப சிகிச்சைகளை குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது. எனவே இது தொடர்பாக உளவளத்துணையாளர்கள் தம்மை இற்றைப்படுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகும்.
முடிவுரை
அவதானக் குறைவும் அதீத செயற்பாடுமுடைய பிள்ளைகளை சாதாரண வகுப்பறையிலும் விசேட அலகுகளிலும், பொதுவாக நாம் சந்திக்கின்றோம். அவர்களுக்கு தமது வீட்டு, பாடசாலை மற்றும் சமூக சூழலில் போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை. அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் பல்வகைமைக்கு மதிப்பளிக்க படுவதுமில்லை. அவர்கள் சமூகத்தை நேசிப்பதில்லை எனவும் அவர்கள் வேண்டுமென்று செயற்படுகின்றனர் என பாரிய குற்றசாட்டுகளை சந்திக்கின்றனர். எனவே இவர்களுக்கு பாடசாலைகள் சரியான பயிற்சி களமாக அமைய வேண்டும். அவர்களுக்கு விருப்பான சூழலாகவும், அங்கு அவர்களின் நடத்தைகள் முகாமைத்துவம் செய்யப்பட்டு சமூகத்துடன் கூடி வாழ்வதற்கான திறன்கள் மேம்படுத்தப்படல் அவசியம். இதன் ஒரு பகுதியாக அவர்களின் கற்றல் அடைவுகள் எய்தப்பட வேண்டும். அவ்வகையில் பாடசாலை சமூகம் முழுவதுமாக தயார்படுத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதன் மிகப்பெரும் பங்குதாரர்களாக ஆசிரியர்களும், உளவளத்துணையாளர்களும் தமது வகிபங்கினை முறையாக ஆற்றுவது எதிர்காலத்திற்கு செய்யும் முதலீடாகும்.
தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்.
உட்படுத்தல் கல்வித் துறை
தேசிய கல்வி நிறுவகம்