
பாத்திமா அஸ்னா சுல்தான்
சிறுவயது முதல் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதன்மையானது அல்லாஹ்வை ஈமான் கொள்ளலாகும் என்பதை மனப்பாடம் ஆக்கி வைத்துள்ளோம் ஆனால் அதன் அறிவுபூர்வமான அரத்தத்தை உயிரோட்டமாக விளங்கிக் கொள்வதில் பலவீனமானவர்களாகவே இருக்கின்றோம். அல்லாஹ்வின் பால் எம் முழுமையாக மீள வேண்டுமானால் அதன் முதற்கட்டமாக அஸ்மாவுல் ஹுஸ்னா என்னும் அழகிய அல்லாஹ்வின் நாமங்களை நாம் விளங்கிக் கொள்ளல் சாலச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கைதான் எம் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை நம்பிக்கையோடு உறுதியோடும் நகர வழி வகுக்கின்றது என்றால் மிகையாகாது.
“எனக்கேற்பட்டிருக்கும் பிரச்சினை வேறு யாருக்கும் ஏற்பட்டால் அவர் தாங்கிக் கொள்ளவே மாட்டார்” -எனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது”சிறுவயதில் இத்தனை சோதனைகளா? போன்ற நடைமுறை வார்த்தை பிரயோகங்களை நாம் நிச்சயமாக கேள்விப்பட்டிருப்போம் அல்லதுகேட்டிருப்போம் அன்றாடம் நம் வாழ்வில் பிரச்சனைகள் கவலைகள் சோதனைகள்,உளநெருக்கீடுகள் அவ்வப்போது வந்து போவது தவிர்க்க முடியாதது ஆனாலும் அதையும் கடந்தது அல்லாஹ் தன் அடியான் மீது வைத்துள்ள அன்பு என்பதை புரிந்து கொள்வோமேயானால் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுகளை அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டி கடந்து செல்லலாம் என்ற உண்மையை ஒவ்வொரு அடியாலும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்பர்களே! பிறக்கும் முன்னே தந்தையையும், பிறந்த சில காலங்களில் தாயையும் இழந்து சிறுபராயத்தில் பெற்றோர் அன்பின்றி, அரவணைப்பின்றி வளர்ந்தவர் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள். அல்லாஹ் இறுதி நபியாக தேர்ந்தெடுத்த எம் உத்தம நபியவர்கள் சந்தித்த சோதனைகளை விடவா நாம் சந்திக்கின்ற சோதனைகள் பெரிது? இல்லவே இல்லை சற்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாம் இவ்வுலக வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்கு நபி முஹம்மது (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்)அவர்களின் சரிதம் பேசும் சிறுவயதில் பெற்றோரை இழந்து வாலிப வயதில் ஆடு மேய்ப்பாளராக இருந்து ஏகத்துவத்தை எத்தி வைக்கும் நேரத்தில் நபி அவர்கள் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் உள்ளடக்க முடியாதவை சொந்த ஊரிலிருந்து விரட்டப்பட்ட போது கூட அல்லாஹ்வின் மீது நபியவர்கள் கொண்ட உறுதியான ஈமான் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி விட்டிருக்கின்றது எத்தனையோ புறக்கணிப்புகள் சோதனைகள்,குறைஷி காபிர்களின் வதைகள் என நபி அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப பட்டியல்கள் நீண்டு கொண்டே போயிலும் “நிச்சயமாக அல்லாஹ் என்னுடன் இருக்கிறான் என்னும் ஆழமான உறுதியும் நம்பிக்கையும் நபியவர்களை வாழ வைத்தது. சரித்திரம் படைக்க வைத்தது
அன்பானவர்களே ! நபி அவர்களின் வாழ்வை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். சோதனையோடு வாசிப்பவர்களுக்கு அது பெரும் ஆறுதல் வாழ்வின் திசை தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு அது ஒரு திசை காட்டி, உளவியல் ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரிய ஆலோசகர் என நபியவர்களின் வகிபாகம் அளப்பரியது. இன்னும் அவகாசம் நேரம் இருக்கிறது நபியவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.
எம் வாழ்வின் பிரச்சனையிலிருந்து விடுபடவே முடியாது நினைத்து எத்தனையோ சம்பவங்களை சர்வ சாதாரணமாய் கடந்து வந்திருக்கலாம் அல்லது இனிமேல் மீளவே முடியாது என வீழ்ந்த மறுகணமே வியக்கும் வகையில் சாதனை படைத்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் காரணம் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை ஒரு படி மேலே வையுங்கள் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையும் உங்கள் மீதான நம்பிக்கையையும் உங்களை உயர்த்தி விடும்
الَّذِي خَلَقَ المَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُغوَ الْعَُزِيَ
உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்பதை சோதிப்பதற்காகவே அவன் வாழ்வையும். மரணத்தையும் ஆக்கிஇருக்கிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன்.மிக்க மன்னிக்கின்றவன் முல்க் 2) (குரா
எனவேஇசோதனைகளிலும்,சாதனைகளிலும் எமது செயல்களின் அழகு பரீட்சிக்கப்படுவது நிச்சயம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்றது அதில் நாம் ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கையை ஒத்த வாழ்க்கையையே வாழ்கின்றோம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எமக்கு ஏற்படும் பிரச்சனைகள் சோதனைகளின் போது நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் வாக்குறுதிகள் எமக்கு நம்பிக்கையூட்டும் அல்லாஹ் தன் திருமறையில் (153
) يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
“”ஈமான் கொண்டவர்களே ! பொறுமையைக் கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”என வாக்களித்திருக்கிறான். எனவே எம் வாழ்வில் நாம் எப்போதும் தொழுகையோடும் பொறுமையோடும் அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நான் இரண்டு விடயங்களை உங்களிடத்தில் வீட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் மற்றது எனது சுன்னாஹ் என நபி அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆகவே இவைகளோடு ஒன்றித்த வாழ்விவை நாம் வாழ முனைய வேண்டும் சோதனைகளின் போது ஆறுதல் அங்கே தேடப்பட வேண்டும் அப்போதே சோதனைகளின் போது ஒரு அடியானின் ஈமான் மென்மேலும் வலுப்பெற்று உறுதி
பெறும். அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கையும் நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதான அளப்பரிய அன்பும் வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை